தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை
வாரம்:220
02/05/2023
“நடிப்பு”

பரந்து விரிந்த விந்தை உலகமிது
போராட்டமே வாழ்க்கையான காலமிது
உயிர் தப்பி வாழ்வதற்கு வேண்டும் நடிப்பு
உயிர்கள் யாவற்றுக்கும் பொருந்தும் நியதியது

படமெடுத்தாடும் பாம்பின் உயரிய நடிப்பு
செத்ததுபோல் நடிப்பது மானின் சிறப்பு
நிறம்மாறும் ஓணானின் நவரச நடிப்பு
நரிக்குணம் கொண்டோரின் தந்திர நடிப்பு

அடம்பிடிக்கும் குழந்தையின் அசராத நடிப்பு
அன்பாலே அரவணப்பது தாயின் பொறுப்பு
உள்ளதின் வேதனை உதட்டில் காட்டாத நடிப்பு
உண்மையாய் வாழ்வதே உயர்ந்த மதிப்பு

ஓப்பனையில்லா முகத்திலும் மிளிரும் நடிப்பு
ஓப்பனையிருந்தும் மிளிராது பலருக்கு நடிப்பு
சமாதானப் புறா நோர்வேயின் உலகமகா நடிப்பு
அணைந்து போனது ஈழவிடுதலையின் நெருப்பு

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading