” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

காணி
அன்னை ஞாபகம் அந்தக் காணி
அதனை மறக்க யாரால் முடியும்
தன்னை கொடுத்து தாங்கிக் காத்து
தனமும் தந்த தங்கப் பூமி

புல்லும் வளர்ந்து பொது இடமாகி
போவோர் வருவோர் போக்கிட மாகி
அல்லும் பகலும் ஆக்கியது எல்லாம்
அபகரித்தும் அதைக் காக்க

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு
பற்றை வளர்ந்து பாம்புப் புற்றாய்
வார் ஓடி வரம்பும் போய்
வளர்ந்த தென்னை வருமானம் வளமாய்

உடையவன் இன்றேல் ஒருமுழம் கட்டை
உண்மைப் பழமொழி இதவும் அன்றோ
அடுத்தவர் கையில் கொடுப்பது யாவும்
அபகரிப் ஆக துயரமே தேறும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan