நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
தலைப்பு
*ஆறுமோ ஆவல்*

கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர்
குவலயத் தமிழ்மொழியே

சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும்
சங்கத்தமிழ் அணங்கே

ஊறும் உணர்வினில் உள்ளத்தில் உதித்துமே
உண்மைகள் சொன்னவளே

பேறென வாய்த்துமே பெருமகிழ்வு ஊட்டியே
பேதையெனை ஈர்த்தவளே

தேறிட என்மனம் தேற்றிடும் வகையினில்
தேடிட அணைந்தவளே

மாறிடும் உலகினில் மாற்றங்கள் இன்றியே
மாண்பினில் காத்தவளே

வீறுகள் கொண்டுமே வீழ்ந்திடா வண்ணமே
விந்தைகள் புரிபவளே

ஆறுமோ ஆவலும் அறிந்திட உன்னையே
ஆற்றுவாய் அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading