நேவிஸ் பிலிப்

கவி இல(106) 22/06/23
அகதி நாம் பெற்ற வரமா????

சொந்த மண்ணிலே சுதந்திரமாய்
வாழ்ந்த காலம்
போர்க்கால சூழலிலே கடல் கடந்து
அயல்நாட்டில்அடைக்கலமானோம்

அகதி வாழ்வின் அவதி
இதுவோ நம் விதியென
கலங்கி வாழ்ந்த காலம்
விடியலுக்காய் ஏங்கி

கண்டம் விட்டு கண்டம் கடந்து
வெளி நாட்டில் தஞ்சம் கொண்டோம்.
மொழி இன மாறு பாடு
பெருந் தாக்கமாய் அச்சுறுத்த

மனித நேயக் கரங்கள்
அபயம் தர
நம்பிக்கைப் பூக்கள்
சில்லெனப் பூத்தது எம்மனதில்

நிலையான வதிவிடம்
நிரந்தர வேலை வாய்ப்பு
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி
நிம்மதியான வாழ்வு&

இதுவே இன்று நிரந்தரமாச்சு
தலை முறைகளும் உருவாச்சு
அகதி வாழ்வு தந்த வரம்
நாமும் இந்நாட்டு மக்களே
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading