நேவிஸ் பிலிப்

கவி இல (109) 13/07/23
கலவரம்
சிறு பொறியை ஊதியூதி
பெரு நெருப்பாய் எரிய விடும்
வன்முறை சமுகமாய்
மாறுகிற இன்றைய உலகில்

பண்பற்ற சூழலிலே தீமைகள் பெருகி
எவ்விடம் நோக்கினும் அமைதியின்மை
குண்டு வீச்சினால் பகை புகையாக
பொதுச் சொத்துக்களின்
சேதாரம் ஏராளமாய்

சகிப்பின்மையும்.மத வன் முறையும்
வளர்த்து வரும்
இளைய சமுதாயப் போக்கை
மாற்றுவார் யாரோ?

காலம் கடந்து சிந்திப்பதில்
பயனேதுமுண்டோ
வன்முறைகள் கட்டுக்குள்
அடங்காவிடின்

நாடும் வீடும் நலம்கெட்டு
சமுதாயம் சீரழிந்து
போய்விடுமே

அனைவருக்கும் வாழ்துக்களுடன்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading