20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயம் தங்கராஜா
கவி 662
கறுப்பு யூலை 40 வருடம்
மனிதமறியா தேசத்தில் பிறந்தது குற்றம்
குனியக்குனிய குட்டிக்கொண்டே இருக்கின்றது சுற்றம்
வழியின்றி தவிக்கின்றது பாவப்பட்ட இனமொன்று
அழிப்பதற்காகவே கூடவே இன்னோர் இனமொன்று
எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்காதது
சிந்தைக்குள் நெருப்பாக எரியும் உறங்காதது
அன்பைப் பற்றி தெரியாத கூட்டம்
அன்றுதொட்டு இன்றுவரை அரக்கராய் ஆட்டம்
இரக்கத்தை இரந்துமே கேட்பவர் நாம்
இரத்தம் சிந்தவென தோன்றியவர் நாம்
காணாமல் போகவென பிறவியெடுத்தவர் நாம்
வீணாக்கி உடமைகளை அகதியாகுவதும் நாம்
தமிழராய் இருப்பது மண்ணிலே பாவம்
நிமிரவிடாதே கிடைத்தது நீங்காத சாபம்
மண்ணென்னையும் நீருமாக நாட்டுக்குள்ளே ஈரினங்கள்
ஒன்றுபடா இந்நிலையில் தோன்றிடுமோ சமாதானங்கள்
ஜெயம்
20-07-2023
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...