ரஜனி அன்ரன்

“ ஆளுமையொன்று சரிந்தது “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.08.2023

ஒலிபரப்புத் துறையின் ஆளுமையாளனை
கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரனை
கணீரெனும் செய்தி வாசிப்பாளனை
கலையோடு வாழ்ந்த கலைஞனை
தமிழோசையின் மூச்சானவனை
சட்டம் பயின்ற சட்ட வல்லுனனை
சடுதியாய் கவர்ந்தானே காலனும் விரைந்து !

இலங்கை வானொலியில் தொடங்கிய பயணம்
இங்கிலாந்தில் தமிழோசை வரை தொடர்ந்து
கலை இலக்கியம் நாடகம் ஊடகமென வளர்ந்து
தமிழோசைக்கு உயிர் நாதமாகி
பல்துறைக் கலைஞனாய் பண்பாளனாய் இருந்த
கலைத்தாயின் தலைமகனை
காவு கொண்டதே கொடிய விபத்தும் !

ஊடகத்தை வெளிச்சமாக்கி
தமிழோசைக்கு உயிர்கொடுத்த
ஆளுமையொன்று சரிந்தது
ஒலி அலையொன்று ஓய்ந்தது
உண்மைக் குரலொன்று மெளனித்ததே
மின்னல் வேகத்தில் வந்த மின்ரயிலினாலே !

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading