நகுலா சிவநாதன்

காலநிலை

பருவ காலம் பொய்த்து இன்று
பொழியும் மழையும் அதிகம் பாரீர்
கருவம் இல்லா இயற்கை தன்னில்
கலகம் வருவது எதனாலே?
உருவம் இல்லா நீரும் உருளுது
உலகம் வியக்கும் மழையாலே
அரும்பும் இதழில் துளிர்க்கும் நீரும்
ஆகுதியாகிய நீராலன்றோ!

அண்டம் காணும் வெப்பம் கூடி
கண்டம் எல்லாம் வரட்சிகண்டு
நீரும் இன்றி தவிக்கும் காலம்
நினைத்துப் பார்க்க முடிவதில்லை
கூறு போட்டு பிரிக்கும் காலநிலை
மாறுபடும் காலம் வருமா?
மகிழ்ந்து வாழ மக்கள் இன்று

பாதுகாக்கா இயற்கை தன்னால்
பாய்ந்து வரும் நீரும் முடக்கம்
நெகிழி பைகள் அடைவு கூடி
நித்தம் வெப்பம் பூமி மிகுத்து
சத்தம் இன்றி உயிர்கள் அழிவு
சாவு வந்து அணைக்குது பாரீர்

காலநிலை பொய்கா நீயும் கண்டு
காதல் கொண்டு இயற்கை காப்பீர்
பாலம் போலே இயற்கை அமைத்து
பாதுகாப்போம் புவிதனையே!

நகுலா சிவநாதன் 1728

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading