வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
பால தேவகஜன்
ஒக்ரோபர் ஆறு
என் கரம்பிடித்து
எழுத்தறிவித்த இறைவர்களே!
கரம் கூப்பி வணங்குகிறேன்
நன்றி உணர்வுடனும்
நினைத்தும் பார்க்கிறேன்.
என் தகைமைகளை
கண்டறிந்து
உங்கள் திறமைகள் மூலம்
என்னை தகுதியுள்ளவனாக்க
தன்னலம் பாராது எனக்காக
உழைத்த சிகரங்களே!
உங்கள் பாதம் பணிந்து
என்னாளும் கிடப்பேன்.
எனக்கான வாழ்வு
உங்களின் வழிகாட்டலன்றி
சிறந்திருக்க வாய்ப்பில்லை
என்று என்னாளும் உணர்கின்றேன்.
நான் இன்று காணும் இன்பம்
அன்று நீங்கள் பட்ட துன்பத்தினாலே.
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள்
என் ஆசான்கள் நீங்களே!
கேலிகள் கிண்டல்களும்
எத்தனை செய்தோம்
எங்கள் கோயில்கள் நீங்களே!
என்று உணராத பருவத்தில்.
இன்று அதை நினைக்க
அருவருப்பாய் எங்களை
நாங்களே பார்க்கின்றோம்.
உங்களை காணும் தறுவாயில்
உங்கள் காலில் விழுந்து
கலங்கி அழுது மன்னிப்பு
கேட்டிட வேண்டுமென்ற
எண்ணத்தோடு வாழ்கின்றேன்.
உங்கள் சேவைக்கும்
நீங்கள் தந்த கல்விக்கும்
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன்.
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்த்தடியே
எனக்கான வாழ்வை கடப்பேன்.
