ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

தீப ஒளி

இல்லமெங்கும் ஒளிரட்டும் தீப ஒளி
மெல்லமெல்ல விலகட்டும் பாவம் பழி
நல்லதொரு வாழ்வுக்கு பிறக்கட்டும் வழி
உள்ளமது பேசட்டும் உவகை மொழி

இருளை அகற்ற ஏற்றிடுவோம் தீபம்
அருளைத் தந்தது போக்கிவிடும் பாவம்
கருணை கொள்ளவைத்து நீக்கிவிடும் சாபம்
வருவதெல்லாம் நன்மையாக்கி தந்துவிடும் லாபம்

விடியல் ஒன்று கண்முன்னே பிறக்கும்
பிடித்த சனியும் குறைத்திடும் இறுக்கம்
படியேறி வந்து வசந்தமும் பழகும்
குடியேறும் வெளிச்சத்தால் அமைதியும் நிலவும்

ஜெயம்
07-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading