வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
சிவா சிவதர்சன்
[ வாரம் 244 ]
“எச்சம்”
பறவை பிராணிகளின் எச்சம் பசியதாவரபசளையாகலாம்
பந்திகளில் பரிமாறும் உணவின் எச்சம் பயனின்றிவிரயமாகலாம்
வீதிகளில் விதைக்கும் எச்சம் உடல்நல இடையூறுமாகலாம்
பூமியில் வாழ்ந்த புண்ணியரின் எச்சம் பூதல வாழ்வில் உயர்வுதரலாம்
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்காட்டுவது பொய்யாமொழி
தற்கால வாழ்வை உயர்த்தும் அக்கால சான்றோர் ஈந்த தியாக ஒளி
தமிழர் வாழ்வுயர தம்முயிரீந்த மாவீரர்க்கு ஏற்றும் கார்த்திகை தீபஒளி
ஒற்றுமையில்லாத்தமிழா நீ
இனரீதியிலாவது ஒன்றுபட்டு முழங்கியொலி
மறைக்கப்பட்டாலும் எஞ்சி நிற்கும் நாகரீகத்தின் எச்சம்
வாழையடி வாழையாக வளரும் கலைகளின் எச்சம்
மொழியும் வீரமும் மழுங்கடிக்கப்பட்ட வரலாற்றின்மிச்சம்
மீந்த தமிழ் இலக்கியங்கள் அன்றைய நிலைகாட்டும் எச்சம்
“இவையாவும் இன்றைய தமிழனுக்கு புத்திபுகட்டும் பாட எச்சம்”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
