ஜெயம் தங்கராஜா

கவி 702

மனிதத்தின் நேயமே

மனித வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையிது
தனித்துவிடாது உயிர்களுக்கு ஆற்றும் சேவையிது
வாழ்தலின் உண்மையான அர்த்தங்கள் எவையாவன
தாழ்வில்லா சமூகத்தினை உருவாக்குதல் அவையாவன

ஓரறிவோ ஆறறிவோ அன்புடன் பழகு
பாரினிலே இதுவன்றோ உண்மையான அழகு
காக்கை குருவிகளும் எங்கள் சாதியன்றோ
காக்காவிடின் மரஞ்செடியை இல்லையங்கு நீதியன்றோ

இயந்திரங்களோடு பழகிப்பழகி இரக்கமும்தான் மறந்ததோ
இதயத்திலே மனிதந்தேய்ந்து உணர்வுகளும் மரத்ததோ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
வேதம் இதுதான் கொடுத்து வாழ்வீர்

பார் நிறைத்தே மக்கள் உயிரோடு
யார் யார்தான் இங்கு உயிர்ப்போடு
இறைவனைக் காணலாம் மனிதத்தின் மூலம்
இதையுணர்வோர் அடைவார்கள் வாழ்க்கையிலே அனுகூலம்

ஆண்டான் அடிமை இடைவெளிகள் அழிவங்கு
ஆண்டவரை வணங்கிவிட்டு அலகையாதல் இழிவிங்கு
ஏற்றங்கள் இறக்கங்கள் தற்காலிக நிகழ்விதுவே
மாற்றங்கொண்டால் மாந்தர்களும் மாநிலத்தின் மகிழ்வதுவே

பண்பு என்பது எல்லோரிடத்திலும் உண்டு
மண்ணிலிருக்கும் காலத்திலிதனை அறிதலும் நன்று
எண்ணத்தில் உயர்வினை உருவாக்கிக் கொண்டு
கண்ணெனக் காப்பதை காத்தலே தொண்டு

ஜெயம்
06-12-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading