சிவருபன் சரவேஸ்வரி

காதல்
<<<<<<<<<

கனிவான பேச்சினிலே கனிந்து விட்டேன் _பெண்ணே

காலத்தில் நீயுமென் மனைவியாக வேண்டும்

உன்சுந்தர வதனமும் என்னை சுழரவைக்குதடி

உனதன்பினையும் யானும் யாசித்து நின்றேனடி

கல்யானக் காலம் இருக்கின்றது மச்சானே

காசுபணம் வேண்டும் உழைத்து வாமுன்பே

கிணற்று நீரையும் ஆற்றுவெள்ளம் தள்ளாது

கிள்ளை மொழியாள் உனக்கே சொந்தமாவேன்

பக்கத்தே நீயும் பருவமாய் நிற்கையிலே

பட்ணம் போகவும் எனக்கோ மனமில்லை

திட்டம் ஒன்றும் சொல்லாதே மானே

தீர்த்திடுவாய் எந்தன் காதலையும் நீயும்

விளையாட வேண்டாம் மச்சானே நீயும்

விரும்பியபடி உன்னை நானும் மணப்பேன்
நிலையான சொத்து எமக்கு வேண்டும் __ கண்ணாளா

நிம்மதியாக நாம் புரிவோம் காதலே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading