வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.24
ஆக்கம்-132
மாசி

மாசிப் பனியால் புல் நுனி
பூ மொட்டழகாய் முட்டும்
வாழை,மாவிலையில் துளி
நீர் சொட்டாய்ச் சொட்டும்

மாசி வெப்பம் கூசி மின்னிடும்
மூசிய பனிப்புகை மேனியிடும்
நாசி அடைத்து நீர் வடிந்திடும்
தூசி குடைந்து தும்மிடும்

பாதித் தூக்கமோ வெடிக்கும்
மீதி சொல் வராது பல் நடுங்கி
வாய் திறக்கா தந்தி அடிக்கும்

சோதி வடிவில் மாசி மகம்
சதுர்த்தி விரதம் நினைவிட
சோர்வின்றிய உற்சாகம்
மனதில் பொங்கிடுமே .

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading