திருத்தம்

மாசி வந்தாலே ( 601) 08.02.2024
மாசியிலே மகத்தான பிறப்பு
மனையிலே பெற்றோராய் சிறப்பு
மகிழ்ச்சியே இல்லற இணைவு
மண்ணிலே வந்ததே பிரிவு

பாசத்தால் இருவரின் அன்பு
வேசத்தால் நடிக்காத பண்பு
பாதியிலே பிரிந்திட்ட தந்தை
பக்குவமாய் காத்திட்ட விந்தை

ஆண்டுடன் மாதமும் ஒன்றாய்
மாண்டதே நாற்பத்து ஒன்பதாய்
தாண்டுதே நூறாவது அகவையாய்
வலிக்குதே இன்றும் சுமையாய்

அன்னையும் அவதரித்த நாளாய்
அகவையும் தொன்னூற்று ஆறாய்
அடுத்தடுத்து வருகுதே ஒன்றாய்
அகமும் துடிக்குதே நெருப்பாய்
ஐயா 24.02.1924 (100-49)
அம்மா 28.02.1928 (96-5)

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading