தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : “காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் ”

காற்றின் வழியே எங்கும் நகர்வாய்
ஆற்றின் ஊற்றாய் எங்கும்
பயனோடு பதிவாய்
பட்டி தொட்டி எங்குமே தொனிப்போடு உறவினை
சேர்த்து இலக்கினை தொடுவாய்

தனிமை நிலை கலைந்து
தாங்கி கொள்வாய்
அவரவர் கிடைக்கைக்கு
ஏற்றம் இறைப்பாய்
வீட்டிற்கு வீடு காற்றோடு
நுழையும் ஆசான் நீ
பட்டங்கள் தந்து விடும்
உன் நுட்பமான
உள் நுழைவு பாடமது

கருத்தினை காவி தளம்
பல காண்பாய் காவியமாக
நூல் பல படைப்பாய்
உலக பரப்பின் பாறை ஒலி
மொழி நீ
பரிமாறும் படையல்கள்
வாழ்வு தரும் பல வழி
விளைச்சளை வாரிடும்
உலகினில் ஒரு சில
களைகளும் சேர்ந்திடும்
செவிகளில்
தக்கதை தக்க படி
சிந்தனை வளமிட
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தரும் வானொலியே
வாழ்த்துகிறோம் இன் நாளும்
எந்நாளும்!!
நன்றி
உலக வானொலி நாள் தினம் 13.02.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading