நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-21
15-02-2024
காற்றின் வழி மொழியாகி, வாழ்வு தந்தாய்
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்
கனத்த மனம் அகற்றி உயிரும் தந்தாய்
பணியின் சுமை இறக்கி, சுகமும் தந்தாய்
பகல், இரவு தெரியாமல் பயணித்தாய்
தனிமைக்கு இனிமையான துணையும் நீ
தன்னலம் கருதாத பொதுநலம் நீ
சேர்க்கையின் பண்பு புகட்டிச் சென்றாய்
செல்லும் வழியெல்லாம் சேர்ந்தே வந்தாய்
சிந்தனையை பெருக்கிச் சென்றாய்
சிந்திக்க எமை வைத்தாய்
இளையோர், பெரியோர் இணைய
இதற்கும் காலம் கொடுத்தாய் நீ
உலக நடப்பை எடுத்து வந்தாய்
ஊரின் சிறப்பை புகட்டிச் சென்றாய்
சொந்த ஆக்கம் தனைக்கொண்டு
சோர்ந்திடமால் தமிழ் வளர்த்தோம்!
தாய்மொழி வளர்த்த நீயவளே
பாமுகம் எனும் பேரில் ஒரு முகமானோம்
ஊடகங்கள் பல நுழைந்தாலும்
உன்னொலி போலுண்டோ வானொலியே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
