அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வலியதோ முதுமை

காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்
இளசுகள் முதியோரை பழசுகள் எனவிழிக்குமாம்
இளமை என்றும் நிரந்தரமில்லை நிஜம்
எல்லோரும் முதுமையடைவதே நியதி
குழந்தையாகி குமரியாகி தாரமாகி தாயாகுவது
குழந்தையாகி குமரனாகி கணவனாகி அப்பாவாவது
அப்பா பேரனாவது அம்மா பேத்தியாவதும்
முதுமையின் நுழைவாசல் முதலடி ஆகும்
இளமையில் இனம்தெரியாத கனவு வரும்
இளமை வாழ்க்கையே ஒரு வசந்தம்
நடுத்தர வாழ்க்கையோ பொறுப்பு அதிகம்
நல்லவை நடக்கையில் அது ஒருசுகந்தம்
வருடம் உருண்டோட உடல் நிலையும் மாற
வயதும் போகும் பலமும் குறையும்
முன்பிருந்த மிடுக்கும் திடமும் குறைய
முதுமை அங்கே எட்டிப் பார்க்கும்
முதுமையை யாரும் வலிந்து எடுப்பதுல்லை
காலநேரம் பார்த்து அதுதானாகவே வரும்
முதுமை வந்தால் வலியும் கூட வரும்
முதுமையை வெனுக்காது அவரை அன்பாக
அரவணைத்து ஆறுதல் கொடுக்க வேண்டும்
அவர்கள் எம்மூத்தவர்கள் முழுமையாக
எம்மைத் தாங்கியவர்கள்
நாமவரை மதித்து வரவேற்று தடப்போம்

Nada Mohan
Author: Nada Mohan