வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

வலியோ முதுமை

வலியோ முதுமை

கெலியோ பிறப்பில் இளமை
வலியோ இறப்பின் முதுமை
பலியோ சலிப்பில் பழமை

கூலியோ அன்றைய இனிமை
காலியோ முதிர்வின்
தனிமை
சோலியோ வயோதிப பதுமை

உற்றார் உறவினரன்றி
சிறகொடிந்த வேதனை
வேலி
பற்றறிந்த போதனை
வேதாந்த சீதனம் ஜாலி

மனதில் பிரிவின்
ஆதிக்கம்
கனமான உயிரைப்
பாதிக்க தினந்தினம்
இரவு பகல் சோதிக்க
பலியின் வலியோ முதுமை.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading