வசந்தா ஜெகதீசன்

தீதும் நன்றும்....

பரபரப்பாய் சுழல்கிறது
பாதைகளில் புரட்சி
படருகின்ற வளர்ச்சியிலே
பருவங்களே உயர்ச்சி
தடுமாறும் பண்பாட்டில்
தளிர்களினம் வாடும்
கைமாறும் போதையிலே
கலகங்களே பிறக்கும்
தேவையற்ற வழிகளில்
திசைமாறும் போக்கு
அசைபோட்டு பார்க்கவே
முடியாத ரணங்கள்
அவலத்தின் முகவரியே
அலை மோதும் வாழ்வு
நமக்கே நாம் வரைகின்ற
வாழ்வறத்து கேடு
உணர்வாகி உய்த்தறிந்தால்
உளமாகும் தெளிவு
வசமாகும் வாழ்வு நிலை
வழிவகுத்தல் அறிவு
வரம்புயர நீருயரும்
புரிந்தறிதல் மிகையே
தீதும் நன்றும் எமையாளும்
மனச்சாட்சி மன்று
மறவாது மனுநீதி நிறைவாக்கி நிமிரு.

நன்றி மிக்க நன்றி
என்றும் குரலிணைவும், திறனாய்வும் மிகைப்பட தரும்
இருவர் பணிக்கும் மிக்க மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading