தீதும் நன்றும்

கெங்கா ஸ்ரான்லி

செய்த செயல் புண்ணியம்
செய்யாவிட்டால் பாவமுமில்லை
எண்ணிய கரும்ம் தீது
எடுத்ததை செய்யும் போது
வாய்மையே வெல்லும் என்றும்
வாய்ச்சொல் நல்ல தென்றால்
பொய்மை பொய்க்கும் ஒருநாள்
உண்மை வெளியில் வருகையில்
எல்லோரும் ஓரினம் உறவுகள்
உண்மையா அதுவும் இம்மையில்
பலரும் பேணும் சுயநலம்
பண்பில் அவரில் வெளிப்படும்
சொல்லில் அன்பின் வெளிப்படல்
செய்கையில் அகத்தில் கலப்படம்
உண்மையாக செய்தால் தீதும் நன்று
உண்மையில்லாத்து நன்றும் தீது
நேர்மையில் தீதும் நன்றும்
பார்வையைப் பொறுத்திருக்குமே!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading