அடையாளம்

சிவருபன் சர்வேஸ்வரி

அடையாளம்

அடையும் குறிக்கோள் இலட்சிய நோக்கு
அடைமானம் வைத்தும் அகதிகள் ஆயினர்
உடமையை வைத்தும் உறவுகளை விட்டும்
கடமையே பெரிதென
எண்ணியநோக்கால் அகதிகள்

அடையாளப் படுத்தவும் ஆளறிவுச் சான்றிதழ்
ஒப்பந்தச் சீட்டிலே உரிமையும் கோரல்
ஓடி ஓடி உழைத்து நின்றாலும் கண்டதும் என்னவோ
புலம்பெயர் அகதிகள் என்ற பட்டமே

வல்லவன் பம்பரம் வரம்பிலே ஆடினாலும்
சாதனை செய்துமே ஏட்டிலே பதித்தாலும்
வாதம் புரிந்து வசதிகள் பெற்றாலும்
ஞாலத்தில் பொறிக்கும் அடையாளம் அகதிதானே
உலகத் தமிழர் வரிசையில் என்றும்
உழைக்கும் கரங்கள் உயர்ந்து நின்றாலும்
காட்டும் முயற்சி தீவிரம் அடைந்தாலும்
உன்னதமாக அடையாளம் பெற்றது வரமோ
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading