இலக்கியவானின் நட்சத்திரம்…

ரஜனி அன்ரன் (B.A.) இலக்கியவானின் நட்சத்திரம்... 22.10.2026 ஈழத்து இலக்கிய உலகை இனிய படைப்புக்களால் அலங்கரித்து கவிதைநாடகம்...

Continue reading

அடையாளம்

சுமத்ரா தேவி

கவிதை இலக்கம் 16
தலைப்பு
அடையாளம்

அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து
துடிப்பவர் துவழ
துன்பங்கள் சேர
கொடும்பகை தொடுக்கும்
குடிகளின் கூட்டால்
மடிந்தவர் நொடிந்தவர்
அடி இழந்தவர் நோக
புவிதனில் இவர்கள்
புலன் சூட்டுவதென்ன
ஏதிலிகளாக ஏழைகளாக
இயல்புகள் தொலைக்க
இவர்கள் ஆற்றும்
இன முரண் தான் என்ன
அடையாளத்தின் அழிப்போ
சுமத்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading