விரல் நுனியில் அறிவியல்

நகுலா சிவநாதன்

விரல் நுனியில் அறிவியல்

அறிவியலின் உச்சம் அகத்தினிலே
ஆளுமையின் பேராற்றல் உளமதிலே
விரல் நுனியில் விளங்கும் தொழில்நுட்பம்
வீசிடும் பந்திலும் ஓர் வேகம்

உள்ளம் கைகளுக்குள் கணணிவலை
உணர்விலே வேகச்சிந்தனை நுட்பம்
பள்ளமே தெரியா பாதையோட்டம்
பாரிலே தொழில்நுட்ப திறனோட்டம்

பிறந்த குழந்தையும் கணணிவலைக்குள்
பிறப்பெடுக்கும் படைப்பும் விரல்நுனியில்
கறந்த பாலும் புட்டியில் மின்இணைப்பும்
காலமும் கடுகதியாய் கைபேசிக்குள்

நகுலா சிவநாதன் 1772

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading