திசைகாட்டிகள்

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்த குழந்தைக்கு திசைகாட்டியாக பெற்றோர்
கல்வி கற்கும் மாணவர்க்கு திசைகாட்டியாக ஆசிரியர்கள்
போர் வீரனுக்கு திசைகாட்டியாக தலைவன்
திசைகாட்டியால் நாட்டின் தலைவரானார் அனுரா

வனத்திலோ கடலிலோ திசைகாட்டியின்
உதவியால் கரைசேர்வது போல
துன்பத்தில் உழலும் ஒருவருக்கு
ஒருவர் திசைகாட்டியாக இருப்பது நலமே

நாம் எல்லோரும் நல்நிலையில் இருக்க
எம்குடும்பத்துக்கு திசைகாட்டியாய் அன்னலட்சுமி
உயிருள்ளவரை என்றென்றும் மறவோம்
சிறந்த எம் திசைகாட்டியை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading