பண்டிகை வந்தாலே!

நகுலா சிவநாதன்

பண்டிகை வந்தாலே!

பண்டிகை வந்தாலே
பலனும் கிடைக்கும்
பலகாரம் செய்திடுவோம்
பண்போடு கூடி மகிழ்வோம்

மத்தாப்பு கொழுத்தி
மகிழ்ந்திருந்த தீபாவளி
தித்திக்கும் இனிமையுடன்
திடமாக வந்திடட்டும்

பட்டாடை அணிந்து
பலகாரம் செய்து
புத்தாடை போட்டு
புனிதம் நிறைந்து
கொண்டாடும் பண்டிகை
புனிதம் பெறட்டும்

தீபங்கள் ஏற்றி
தீந்தமிழ்பாடி
தூபங்கள் இட்டு
தூய்மை காப்போம்

நண்பர்கள் சேர்ந்து
நட்புடன் கூடி
பலகாரம் உண்டு
பண்போடு வாழ்வோம்

நகுலா சிவநாதன் 1784

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading