சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 285 அழியாத கோலங்கள் வண்ண மலர்த் தோட்டங்கள்
மின்னும் பல வர்ணங்கள்
என்னுள் தோற்றிடும் எண்ணங்கள்
விண்ணிலேற்றி செலுத்திடும்

வாழ்வென்னும் பூஞ்சோலையிங்கு
சூழ்ந்திடும் ஆயிரம் நிகழ்வுகள்
வீழ்ந்திடும் போது துணிவுடன்
எழுந்திடும் வகையே வாழ்க்கை

கழிந்திடும் பொழுதுகள் அனைத்தும்
விரிந்திடும் எண்ணச் சிறகுகள்
சுரந்திடும் ஆயிரம் உணர்வுகள்-அவை
புரிந்திடும் எனில் என்றும் வெற்றியே

உள்ளத்துக்குள்ளே புரியாமல் ஆயிரம்
வெள்ளமாய் பாய்ந்திடும் நினைவுகள்
வள்ளமாய் அதனுள் மிதந்திட்டே
மெல்லவே நன்றாய்க் கரையேகிடும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading