சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 286
காற்று
அது காதோரம்
எனக்கொரு
கதை பேசியதோ ?

நேற்று
நினைவாகத் தவழ்ந்து
இன்று கனவாக மிதந்த கதை
சொல்லிப் போயிற்றோ ?

வேற்று
உணர்வோடு கலந்து
மீட்டி செவியோடு இணைந்து
கடந்து போனதொரு கணமோ ?

போற்றி
பூத்ததந்த உறவதுவும்
பூட்டிய மனக்கதவை யுடைத்து
பறந்த கதை பரவியதோ ?

சேற்று
நிலமதில் விளைந்த
செந்தாமரையின் வனப்பை
ரசிக்க மறந்த அதன் விளைவோ ?

மாற்று
மனதின் இயல்பை என
காட்டி இயற்கையது புகட்டியதைத்
தெரிந்து கொள்ளும் கணமோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading