ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-54
03-12-2024

பனிப் பூ

உடல் நடுங்க,
இருள் அதிகரிக்க
சுட்டெரிக்கும் சூரியன்
சூடேதும் இன்றி.

பூகோள வெப்ப வலயம்
பறவைகள் தேடிப் பறக்க
பூச்சிகளும் புற்றொடர்களும்
புதுமையாய் மறைய

வெண்பனி தூவி
வெண்கம்பளம் விரிக்க
மொட்டுக்களாய்த் தோன்றி
மலருமே பனிப் பூ.

ஒரு இராத்தல் பாணுக்கு
பல இராத்தல் உடை போட்டு
நடக்க முடியாம
நாமெல்லாம் தத்தளித்தாலும்

இதயம் குளிர்ச்சி
இனிமையான மலர்ச்சி
பனிப் பூ தருமே
பரவசமான மறுமலர்ச்சி.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading