தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
எனது மனது
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இதெல்லாம் இப்போ எங்கே..
ஏக்கம் நிறைந்த தலைமுறை
ஏதிலி வாழ்வின் அகநிலை
ஒன்றிடும் வேளை எதுவென
ஒருகணம் குமுறுது மனநிலை
அன்பு பாசம் வரட்சியில்
அகம் நிறைந்த சூழ்ச்சியில்
மனிதம் தொலைந்த வேதனை
மறுபடி மலருமா மனிதநேயத் தேவதை
அடிப்படைத் தேவையின்றியே
ஆட்படும் துயரில் அனுதினம்
ஆதங்கம் தாங்கும் வேரினம்
அல்லற்படுகுதே மானிடம்
புதைந்து போன தேசாய்
பூக்களற்ற தருக்களாய்
வரண்டு போன மனிதமே
வாழ்வை தொலைத்தது உன்னிடம்
வரமாய் கேட்கிறோம் வழி சொல்லு
மனிதம் வாழ வழி சொல்லு
கருணைக் கொலையும் கனதியே
காப்பக வாழ்வும் குமுறலே
எங்கும் பணம் எஜமானாய்
அரங்கம் காணும் அவதிக்குள்
அடைக்கலமாகுதே மனித உயிர்
ஒருவரை ஒருவர் நேசிப்பு
ஒற்றுமை வாழ்வின் ஆதரவு
பற்றிப் படர்ந்தது பழங்காலம்
பாதை மாறுது இக்காலம்
மனிதம் போற்றி மனிதம் காத்து
மனிதநேயம் பொங்குமா
மானுடத்தின் மாண்பு வாழ்வில் தங்குமா
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments