சிவா சிவதர்சன்

[ வாரம் 290 ]
“இதயம்”

இதயமே இல்லாத மனிதர்வாழும் இவ்வுலகில்
என்னையேன் படைத்தாய் என்னிறைவா?
இதயத்துடிப்பு நின்றால் பிணமென்று வைத்தியமும்
சிவனுக்கே இதயம் நின்றால் சவமென்று மக்களும்நம்புவர்

இதயமின்றி எப்படி மனிதர் வாழுதல் சாத்தியம்?
மூளையில் எழும் மனஎழுச்சிகளின் ஓட்டமே காரணம்
உணவு உடைக்கு பணம் செலுத்துதல் நியாயம்
இலவச வளி, நீருக்குப்பணம்கொடுத்தல் அநியாயம்

அப்பாவிகள் மீது திணிக்கப்படும் உன் சோதனைகள்
இறைவா நீயும் இதயமற்றவன் எனக்காட்டும் ஆதாரங்கள்
மாந்தரில் பணம் படைத்தவர் என வர்க்கங்கள்
அதனால் தினைசரிகூலியிடம் காட்டாதே கருமித்தனங்கள்

சனத்தொகைப்பெருக்கம் உற்பத்திச்சுருக்கம்
உற்பத்தியைப்பெருக்காமல் அரசு மந்திராலோசனை
சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்களை காணைமலாக்கும் திட்டம்
தேவையைக்குறைத்து நிரம்பலை சமப்படுத்தும்

அடுத்தவன் பட்டினியில் வாழும் இதயமே இல்லாத ஈனப்பிறவிகள்!
ஆனால் என்றும் தவறுகள் நீண்டநாள் தூங்குவதில்லை
மக்கள் விளித்தெழும்போது அரசு மீளாத்துயில்கொள்ளும்
மக்கள் தங்களைத்தாங்களே ஆளுதல் இதயம் நிறைந்த ஜனநாயகம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading