முடிவில்ஒன்று

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2079..

முடிவில் ஒன்று

ஆண்டு ஒன்றின் மடிவு
அடுத்த அகவை பிறப்பு
ஒன்றின் முடிவில் ஒன்று
அதுவே வாழ்வியல் பிரிப்பு..

கடந்து வந்த பாதையில்
கடக்க முடியாச் சோதனைகள்
முடங்கிப்போன சிந்தனைகள்
முழுமை பெறாத செயல்பாடுகள்..

பூத்திடக் காத்திருக்கும்
புதிய ஆண்டே உன் மடியில்
தஞ்சம் கோரி நாமிங்கு
அஞ்சுகம் போலவே தவழ்ந்திடவோ..

காத்திருப்பும் சுகமாகும்
காலச் சுழல்வின் ஆதாரம்
முடியாதெழுதிய விதியின் வரி
முழுமை பெறட்டும் பிறந்திடுவாய்..
சிவதர்சனி இராகவன்
26/12/2024

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading