மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

மொழியும் கவியும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
23-01-2025

மொழியும் கவியும்

மொழியும் கவியும் இணைந்தே
மொழிக்கவி உனை புனைந்தே
விழியும் செவியும் விழித்தெழ
விமர்சனம் தரும் காவியமாய்

காலங்களை உணர்த்தி கவிசொல்லி
கருப்பொருளுடன் உணர்வு ஊட்டி
அமுதசுரபியாய் கரம் எடுத்து
அள்ளிப்பருகிடவும் குறையாதிது

கம்பன் சீராட்டி மூவேந்தர் பாராட்டி
கடந்தாலும் மொழிக்கடலில் ஈராயிரமாண்டு
இளமை குன்றாமல் இணையமெல்லாம்
இணையும் மொழியும் கவியும் நீ.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan