நோயற்ற வாழ்வே..

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2100!

நோயற்ற வாழ்வே..!!
கோடி கோடியாய்
உழைத்தே குவித்தாலும்- உடல்
வாடி வதங்கும் நோய்
பிடி விட்டு விலகுமோ- நாடி
நாளம் அடங்கிப் போகும்
நல்ல தேக ஆரோக்கியமின்றி..

வித விதமாய்ப் பரவும்
விசித்திர உலகு வலை விரிக்க
வகை தொகையாய் மாட்டி
வல்ல உயிர் வதை படுமே
மருந்தும் மாத்திரையும்
கூடிவரும் உறவினராய்
கூடு விட்டே உயிர் போகும்
அதுவரை இதன் ஆட்டமேயாம்..

ஆதிகால மனிதன்
அலைந்துலைந்து வாழ்ந்தான்
அவனே அறியா நோயெலாம்
ஆட்டிப் படைக்குது இங்கே
நாளொரு புதுமை விரிகிறது
மீளா உலகுக்கு உயிரோ
நோயென வீழ்ந்து பறக்கிறது..
சிவதர்சனி இராகவன்
30/1/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading