வதனி தயாபரன்

எனது வி ருப்பு கவிதை …..
நான் தேடும் இறைவன் இவன், சிரிப்புக்கு மெட்ட அழகாய் , விரிகின்ற தாமரையாய், மென்மை உள்ள இதயத்தில், மிகுந்த அழகுடையான் . கனவுக்குள் அவன் உலகம், கண் உறங்கி எழும்பும் போது , உணவுக்காய் சிறு சினுக்கம். அம்மாவின் உலகில் அவனுக்கு தனி உலகம். துன்ப துயரத்திலோ, போலியுள்ள உலகத்தில் இவனுக்கு பங்கு இல்லை. போட்டி பொறாமை உள்ள மனிதனின் முகமூடி இவனுக்கு தெரியாது. பணம் என்ற காகிதத்தில் பின்னால் ஓடோடி திரிய வேண்டாம். கோடிகளை சேர்ப்பதற்கு இன்பத்து தொலைக்க வேண்டாம். கண்ணே கண்மணியே, கனவுலகில் வாழ்ந்து விடு. பொல்லாத உலகத்தில் கால் பதிக்கு முன் , உன்னை நீ தயார் படுத்து, மாயை உலகத்தில் திரையிட்ட ஆயிரம் இதயங்கள், ஆய்வுகள் செய்ய உனக்கு அனுபவம் காணாது, நீ உறங்கி விடு உலகம் உனக்காக காத்திருக்கும் … நீ மனிதனாக… நல்ல நேர்மையுள்ள மனிதனாய் உலகத்தில் நீ வருவாய்…. உனக்காக காத்திருப்போம்
வதனி தயாபரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading