புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

மாற்றம் ஒன்றே

ஜெயம் தங்கராஜா
ஒரு மனிதனுள் ஏற்படும் மாற்றம்
அதுவே அவரை வாழ்க்கையில் முன்னேற்றும்
இதுவே வெற்றிக்கான மாறாத தேற்றம்
பொதுவாய் தத்துவ ஞானிகளின் கூற்றும்

உலகம் வேகமாக மாறிவருகின்றது உண்மை
சில பின்னடைவாயினும் புதுமையாகும் தன்மை
வளர்ச்சி இங்கே எதனால் சாத்தியம்
உளத்தை சரிசெய்தால் அனைத்தும் சாத்தியம்

வற்புறுத்தல் இல்லாமல் விரும்பியே மேற்கொண்டு
இற்றைவரை காணாத உற்சாகங்களைக் கண்டு
இயற்கைக்கு மாறாக வாழ்வதை தவிர்த்து
வயதுக்குள் மாறுவதே வாழ்க்கைக்கு விருந்து

சூழ்நிலைக்கேற்ப மாற்றம் இங்கே நிகழ்கின்றது
வாழ்நிலைக்குள் நல்லதோ தீயதோ விளைக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan