ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாற்றம் ஒன்றே!

மாற்றம் ஒன்றே!

ஒன்றே இறைவன் ஒருவனே பரமன்
நன்றே உரைப்போம் நமக்குள் என்றும்
மாற்றம் வாழ்வில் மகிமை தரட்டும்
ஏற்றம் அதுவும் எழிலாய் உயரட்டும்

வாழ்க்கை மாற்றம் வரம்பு மீறி
வீழ்ச்சி இதனால் வீம்பும் பலவாய்
ஆட்சி மாற்றம் அகிலத்தில் இன்று
அதனால் அவலம் உலகத்திலின்று

சூழ்ச்சி அரசியல் சுகத்தை இழக்குது
காட்சி இங்கு கனிமம் பறித்திட
தாச்சி விளையாட்டு சரித்திரமாய் இன்று
பாச்சும் நீரும் மாற்றம் காணுதே!

பாமுக மாற்றம் பன்முகத்தோற்றம்
நாமதை பார்க்க நன்றே ஒளிருது
மாற்றம் வேண்டும் மங்கா வாழ்வில்
ஆற்றும் கடமை அறிந்தே உயர்வாய்

நகுலா சிவநாதன் 1799

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading