தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மாற்றம் ஒன்றே

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-51
06-03-2025

மாற்றம் ஒன்றே
மாறாதது மானிடரே
மாற்றத்தை எதிர்த்தவன்
மாறா வாழ்க்கை சுமை

மாற்றத்தைப் பற்றியவன்
மாபெரும் பாக்கியசாலி
விஞ்ஞான வளர்ச்சியில்
விருந்தாக வந்தது

கண்ணுக்கு குளிர்ச்சியும்
காதோரம் நிகழ்ச்சியும்
பாமுகம் இணையம்
பலவாறாய் மாற்றம்

பரிவுடன் பற்றிநாம்
பயிலப் பல உத்திகள்
சீரான பணிக்கு
சிறப்பான நன்றிகள்.

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading