ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாற்றம்-67

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025

மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது சிலிர்ப்பு

சிலமாற்றமும் வலியும் தோழர்களே
சீரிய மாயவித்தை கொண்டவரே
மூளையினூடாய் இதயத்தை இறுக்கி
மூலையில் போடும் முனைவரே

சிந்தனை இல்லா மூளையும்
இரந்து பேசா இதயமும்
ஈகை அளிக்கா கரங்களும்
இவற்றில் வேண்டும் மாற்றமே

அழகு கொண்டது குணமாற்றம்
ஆரோக்கியம் நிறைந்தது உருமாற்றம்
அனுபவம் பெற்றது கருத்துப்பரிமாற்றம்
அனுதினமும் அவசியம் இம்மாற்றம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading