முதுமை

முதுமை

தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும்
இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும்
முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில்
அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில்

கருகியே காயந்த பட்டமரம் போல்
சுருங்கிய தோலுடன் வனப்பில்லா மேல்
தொந்தரவு என்றே உறவுகள் நினைக்கும்
சொந்தமென உள்ளவரும் அருகிலில்லை துணைக்கும்

வீறுநடை போட்ட காலமதும் எங்கே
தாறுமாறு சீவியத்தின் கோலமுமாய் இங்கே
பாரமாய் தோன்றிவிடும் விடிகின்ற தினமும்
சேரவே மறுத்திடும் மகிழ்ச்சியின் கணமும்

ஒழிந்திடும் வாழ்வுடன் ஒட்டிய இனிமை
ஒளித்திடும் உறவுகளினால் கொன்றுவிடும் தனிமை
அவரவர்க்கு வந்தாலே கொடுமையதும் தெரியும்
கவனிப்பாரற்ற நிலையினிலே ஆறடியும் சரியும்

07-04-2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading