தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழியும்,குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டி முட்டியதே
கண்ணீரும் வடிந்து வடிந்து ஓடுமே

மாசு படிந்தது புவியின் போராலே
காற்றலையும் காவி பிடித்த குறை
கறையாகப் போராடிக் களைக்கப்
பறை சாற்றும் எரிமலைப் பாறை
உறைந்துருகிய நெருப்புக்குழம்பு

பூசி மெழுகி ஊர் ஊராகப் பரவிட
தூசி மாசாக சாம்பலாய்ப் பறக்க
மூசி மூசியே வாழும் மானிடரில்
மூழ்கும் நோயின் புலம்பலாகுதே.

Nada Mohan
Author: Nada Mohan