வெள்ளி விழா நிறை வாழ்த்து

இரா.விஜயகௌரி
தமிழோடு எழில் கொஞ்சும்
வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள்
இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த
நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள்
சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள்
கொட்டி வைத்த அன்பெழுதி
குவலயத்தில் பத்திரமாய் பவித்திரமாய்
எழுதி வைத்த அழகான வாழ்வுக்கும் சான்று

நித்தியமாய் இவர் வாழ்வில் நிதம்
இழை பின்னியெழும் பக்குவமும் பரிவும்
சுற்றமெலாம் சூழ சுகந்தமென அன்பெழுத
கடிகாரக் கம்பிகளாய் இணைபிரியாதெழுக

பாமுகத்தின் சொந்தமிவள் பாசமுடன்
தமிழால் கோலமிடும் பெருங்கவியை
இராகவனார் கையிழைய கொஞ்சியெழும்
பாசமுடன் நீடு வாழி இணை பிரியா
சொந்தமென வெள்ளி விழா நாயகியாய்
நீடு நிலை பெற வாழி வாழி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading