அறிவின் விருட்சம்

ரஜனி அன்ரன் (B.A) “ அறிவின் விருட்சம் “ 24.04.2025

புத்தகம் வெறும் காகிதமல்ல
புத்தியைத் தீட்டிடும் ஆயுதம்
ஆலமரத் தோப்பின் விருட்சம்
அறிவுத்தாகம் தீர்க்கும் வற்றாத நதி
இனிமை வாழ்விற்கு இட்டுச்சென்று
தனிமையைப் போக்கிடும் தோழி
புத்திமதி கூறிடும் புத்தகம்
வித்தகமான அறிவுப் பொக்கிஷம் !

அறிவின் ஆழக்கடல் அறநெறி ஊற்று
அறிவுக்குள் எமையேற்றி அழகுபார்க்கும் ராணி
மெளனமே இதன் மொழி
வார்த்தையின் கனதியோ இதன் இடி
காலத்தையும் கடந்த ஒளிக்கீற்று
காலவரலாற்றைக் கட்டியம்கூறும் ஞானி
ஒவ்வொரு பக்கமும் ஒருஉலகம் !

மாற்றத்தைத் தூண்டும் மாயக்காரி
ஆற்றலை அதிகரிக்கும் ஆர்வக்காரி
அறிவின் விருட்சம் புத்தகமே !