அறிவின் விருட்சம்

அறிவின் விருட்சம் – 57
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-04-2025

அறிவின் விருட்சமே பெண்ணே
அன்னைக்கு நிகரே நீவிர்
முன்னேறத் தூண்டும் முதலுதவி
மூச்சாய் எம்முள் நுழைந்தவளே

கல்வியில் இருள் நீக்கும் சுடர்
கடமையில் உலகைக் காட்டும் ஒளி
பொறுமையில் பூமாதேவி
போர் என்றால் சூறாவளி

இளைஞர்களிற்கு இதமான வழிகாட்டி
இவரே ஏனையோர்க்கு அறிவு புகட்டி
இம்மை வறுமை இல்லா
அறிவின் விருட்சம் நீவிர் வாழ்க…

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading