நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

எழுத்தாளர் வாரம்

இரா.விஜயகௌரி

அன்னையின் மொழியாய்
அழகின் தமிழாய் அவர்
கிள்ளை மொழியில்அமிழ்தென
தெள்ளிய இழையாய் விதைத்த தமிழ்

சுவைத்து எடுத்து தொடுத்து மகிழ்ந்து
விதைத்து வியந்து வினைத்திறன் பின்னி
உணர்ந்து உயிர்ப்பை உரமாய் எழுதி
இளையவர் கரங்கள் பொறித்த தமிழ்

விரல்வழி நெய்து மொழிதனை ஆய்ந்து
மெய்ப்பட மெய்யினில் மெதுவாய் கலந்து
குரலினில்குழைய குலவிக்களித்து
குழந்தைகள் நாளும் இசைத்த தமிழ்

ஆம் பாமுகப் பந்தலில் பரவிச் செறிய
எழிலுடன் நிதமும் கொய்திடும் அழகை
ஆண்டுகள் இருபத்தெட்டினில் ஆங்கே
அற்புத பின்னலில்அளைந்த தமிழ்

நாளைய வாழ்வின்நற்பயிர் தம்மை
இன்றே செழிக்கமொழிவளம் இழைய
மொழிந்து மொழிந்து எழுந்த தமிழ்
வாழிய இவர் பணி வளமுடன் பேணிட

Nada Mohan
Author: Nada Mohan