வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025

மூவுலகைக் காக்கும் தேவியரே
மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை

உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும்
வளரும் பயிராகி
வளம் பெருக்குவாய் நீயே

வாணியின் வளவில் நுழைந்த மனம்
வாழ்வின் தத்துவம் பேசுகிறது
அமைதி வாசம் வீசுகிறது
ஞான ஒளி தெரிகிறது

கல்வி கலைகளை யோசிக்கிறது
மாலை நேரம் கூடுகிறது
கலந்து மனமும் சிந்திக்கிறது
கதை,கவிதை கோலமிடுகிறது

வாணியின் வளவு அமைதியாய்
வனாந்தரமற்று செழிக்கிறது.
கலைக்கு அரசியாய் நீவிர்
கவி புனைய வைத்தாயே தாயே

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading