முருங்கை 23/10/2025

முருங்கை (734) செல்வி நித்தியானந்தன்
மரவகையில் இதுவும் ஒன்றாய்
மானிட பலரும் பயன்பாடாய்
மனித உணவின் பொருளாய்
மரக்கிளைகள் எளிதில் ஒடிவாய்

மண்கள் அனைத்திலும் வளர்வாய்
மணல் பரப்பில் அதிவரவாய்
முப்பது அடியே உயர்வாய்
முரிஎன்ற சொல் வரவாய்

ஆசியாவில் ஆரம்ப நிலையாய்
ஆபிரிக்க அமெரிக்கா தொடராய்
அரியவகை இடப் பெயராய்
ஆறுமாதம் ஒருவருடப் பயிராய்

நீளமான தடியின் வடிவமாய்
நீண்ட புதிய கண்டுபிடிப்பாய்
நீர்சத்துடன் பல ஊட்ட சத்தாய்
நிர்ணயமானதே வளர்முக நாட்டிலுமே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading