இனிய தீபாவளியே-2083 ஜெயா நடேசன்

சுட்டியில் தீபங்கள் ஒளியேற்றி
திக்கெட்டும் இருள் அகன்றிட
நற் செயல்கள் மேலோங்க
வாராய் இனிய தீபாவளியே
இன்னல்கள் பலதும் தீர்ந்திட
இதயங்கள் செம்மையாய் மகிழ்ந்திட
புனிதமாய் கொண்டாடும்
புனித தீபாவளியே வருக
அசுரனை ஒழித்து அகமகிழ்ந்த நாளிலே
மக்கள் துயர் தீர்க்க வந்தாய் தீபாவளியே
குதுகலமாய் கொண்டாடி மகிழும் நாளாய்
ஆண்டு தோறும் வந்து போகிறாய் தீபாவளியே
மக்கள் வாழ்வு சீரும் சிறப்புடன் வளம் பெற
நன் நாளாய் வந்து அவதரிப்பாய் இனியவளே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading