ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“உணர்வு “

சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210

“உணர்வு”

உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!

ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு செய்தியை!

அம்மா பொரித்த முட்டையின் மணம்
இன்றும் உணர்வாய்
வெடிக்கின்றது!

உன் உணர்வுகளை மதிக்கும்
இடத்தில்
அட்சயபாத்திரமாக இரு!

அம்மாவின் உள்ளத்து குமுறல் கண்ணீரால்
நிரம்பி வழிந்தது
ஐயாவின் துயர்பகிர்வில் துயரம்!

கார்த்திகை
இருபத்தி ஏழு
உணர்வு எழுச்சி நாள்
உள்ளத்து குமுறல்களை தீப ஒளியில் காட்டும் நாள்!

நன்றி
வணக்கம்
09.11.25

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading