குறைகளைக் குறைத்திட உயர்வு

குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது
தேம்பியே நின்று திசையும் மாறாது
ஓங்கியே வாழவும் உன்னதம் கிடைக்குமே
குறைகளைக் குறைத்திடு உயர்வே வந்திடும்
அயராத பணியிலே ஆளுமையும் வேண்டுமே
வளையாத பாதைகள் எங்கும் இல்லையே
வளைந்தாலும் நிமிரும் வண்ணமே என்றுமே
இனிதான வரமும் இகத்திலே மலரட்டும்
புதுமை தந்திடப் பூமகள் வருகின்றாள்
பொங்கிடும் மனதிலே புனிதமும் நிலைத்திடவே
பொங்குவாய் கதிரவன் வரவே நீயும்
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading